இன்று முதல் அமலுக்கு வந்த போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்: விவரம் உள்ளே!

  கண்மணி   | Last Modified : 01 Sep, 2019 11:25 am
details-of-traffic-violation-s-penalties

போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டனைகள் மற்றும் அபாரதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு  வந்துள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டனைகள் மற்றும் அபராதங்கள் குறித்த பட்டியல்..

 குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ .10,000 ஆகவும், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் ரூ .1,000 க்கு பதிலாக ரூ .5,000 அபராதம் வசூலிக்கப்படும் 

சிறார்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவரது பெற்றோர் / பாதுகாவலர்கள் / வாகன உரிமையாளர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ரூ .25,000 அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அதோடு வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்

 பொது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் ரூ. 500.

விதிகள் மற்றும் சாலை விதிமுறைகளை மீறுவது ரூ. 500.

டிக்கெட் இல்லாத பயணத்திற்கான அபராதம் ரூ. 200 முதல் ரூ. 500.

போக்குவரத்து போலீசாரின் உத்தரவுகளை மீறுவது ரூ. 2000.

ஆர்.சி புத்தகம்  இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தினால்  அபராதம் ரூ. 5000.

ஓட்டுநர் உரிமம்  இல்லாமல் வாகனம் பயன்படுத்துவதற்கு  ரூ. 5000 அபராதம்.

 ஓட்டுநர் உரிமம்  ரத்து செய்யப்பட்ட பின்னர் வாகனங்களை ஓட்டுவது ரூ. 10,000.

விதிக்கபட்ட அளவை விட விதியை மீறி பெரிதாக்கப்பட்ட வாகனங்களுக்கான அபராதம்  ரூ. 5000.

 அதி வேகமாக வாகனங்களை இயக்குவது   சிறிய ரக  மோட்டார் வாகனங்களுக்கு  ரூ. 1000 மும், நடுத்தர அளவிலான வாகனங்களுக்கு ரூ 2000மும் விதிக்கப்பட்டுள்ளது.

 கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் ரூ. 5000.

 போக்குவரத்து விதியை மீறி நடைபெறும் வாகன பந்தயத்திற்கு  ரூ. 10,000.

 அனுமதி இல்லாமல் வாகனங்களை ஓட்டடினால்  ரூ. 10,000 அபராதமாக வசூலிக்கப்படும்.

உரிம நிபந்தனைகளை மீறுவது ரூ. 25,000 மற்றும் ரூ. 1 லட்சம்.

அதிக எடையை ஏற்றி செல்லும் செல்லும் வாகனங்களுக்கு ரூ. 20,000 மற்றும் கூடுதலாக உள்ள  ஒவ்வொரு ரூ. 2000 அபராதமாக விதிக்கப்படும்.

கூடுதல் பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ரூ .1000  அபராதம்.

சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தில் பயணித்தால் ரூ. 1000.

இரண்டு பயணிகளுக்கு மேல் அதிக நபர்களை அமரவைத்து  இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ. 2000 மற்றும் ஓட்டுநர் உரிமம்  3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்.

ஹெல்மெட்அணியாமல் வாகனம் ஓட்டினால்  ரூ. 1000மும் , ஓட்டுநர் உரிமம் 3 மாதம் காலத்திற்கு தடை செய்யப்படும். 

 அவசர வாகனங்கள் (தீயணைப்பு இயந்திரம், ஆம்புலன்ஸ்) செல்வதைத் தடுப்பதற்கு ரூ. 10,000.

வாகன  காப்பீடு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்துவது ரூ. 2000.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close