5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

  கண்மணி   | Last Modified : 01 Sep, 2019 11:58 am
appointment-of-new-governors-to-5-states

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

5 மாநிலங்களுக்கு புதிய  ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கேரளா, மகாராஷ்டிரா ,  இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானாஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழிசை சௌந்தரராஜனும் , கேரள ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு கேரள மாநில ஆளுநராக ஆரிஃப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல  இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . பண்டாரு தத்தாத்ரே புதிய  இமாச்சல ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக  பகத் சிங் கௌஷ்யாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close