லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்?

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 08:33 pm
lalu-prasad-s-health-condition-not-stable

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சனை காரணமாக அவர் கடந்த ஒரு வருடமாக ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தற்போது அவருக்கு சிறுநீரகப் பிரச்னை அதிகரித்துள்ளதால், சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை.  அதேபோன்று ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்தத்தின் அளவு சீராக இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close