சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கணக்கு விபரங்கள் இன்று முதல் வெளியீடு! - மத்திய அரசு அதிரடி

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 08:34 pm
india-will-start-getting-swiss-bank-details-of-indians-from-today

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் கணக்குகள் குறித்த விபரங்களை மத்திய அரசு விரைவில் வெளியிடவுள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து கறுப்புப் பணத்திற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், "சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் அனைத்து நிதிக் கணக்குகள் தொடர்பாக தகவல்களை மத்திய அரசு பெறுவதுடன் விரைவில் அந்த பட்டியலை வெளியிடவும் உள்ளது. கறுப்புப் பணத்திற்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளில் இது குறிப்பிடத்தக்கதாக இருக்கும்" என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செப்டம்பர் மாதம் முதலே இந்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு வெளியிப்பிடப்படும் பட்சத்தில், இது மோடி அரசாங்கத்தின் கறுப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தின் வெற்றியாகவே பார்க்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close