நிமிடத்திற்கு 7447 பேர்: ஒரே நாளில் புதிய சாதனை

  Newstm Desk   | Last Modified : 01 Sep, 2019 10:09 pm
income-tax-filing-new-record-overnight

ஒரே நாளில் ஆன்லைனில் அதிகம் பேர் வருமானவரி தாக்கல் செய்ததால் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 31-ஆம் தேதி ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக மட்டும் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, வினாடிக்கு 196 பேரும், நிமிடத்திற்கு 7447 பேரும், ஒரு மணி நேரத்திற்கு 3,87,571 பேரும் தங்களுடைய வருமானவரி கணக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

ஒரே நாளில் ஆன்லைனில் அதிகம் பேர் வருமானவரி தாக்கல் செய்துள்ளது இதுவே முதல்முறை என்றும்,  இதன் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்  கடந்த 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close