மிக் விமானத்தில் மீண்டும் அபினந்தன்!

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 06:59 pm
wing-commander-abhinandan-flown-in-mig-21-fighter-get

பாகிஸ்தானுக்கு எதிரான வான்வெளி தாக்குதலில் அற்புதம் நிகழ்த்தி, எதிரியின் கோட்டைக்குள் நுழைந்தும், கம்பீரமாக நாடு திரும்பிய விங் கமாண்டர் அபினந்தன் மீண்டும் மிக் 21 ரக போர் விமானத்தில் பறந்தார். 

பிப்ரவரியில் பாகிஸ்தான் போர் விமானங்களை நம் நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் துரத்தி அடித்து, துரதிஷ்டவசமாக எதிரி படையிடம் சிக்கியும், தாய் நாட்டு ரகசியங்களை வெளியே சொல்லாமல் காத்தவர் இந்திய விமானப்படை அதிகாரி, விங் கமாண்டர் அபினந்தன். இவரது தந்தையும், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியே. 

மத்திய அரசின் துரித முயற்சியால் அவர், நாடு திரும்பினார். நம் நாட்டு இளைஞர்களுக்கு ஹீரோவாக காட்சியளிக்கும் அபினந்தன், இன்று மீண்டும் மிக் 21 ரக போர் விமானத்தில் பறந்தார். 

இந்திய விமானப்படை தலைமை தளபதி, ஏர் சீப் மார்ஷல் பி எஸ் தனோவா, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, இன்று அவர் மிக் 21 ரக போர் விமானத்தில் பறந்தார். அவருடன் இணை பைலட்டாக, அபினந்தனும் பறந்தார். 

கார்கில் போரின் போது பாகிஸ்தானுக்கு எதிரான வான்வெளி தாக்குதலில் தனோவா மிகப்பெரும் பங்காற்றினார். இவர், அபினந்தனின் தந்தையுடனும் போர் விமானத்தில் பறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close