நிலவை நெருங்கும் சந்திராயன் 2 லேண்டர்!

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2019 09:58 am
chandrayaan-2-lander-approaching-the-moon

நிலவை சுற்றி வரும் லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து  சந்திராயன் 2 விண்கலத்தை, ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.  பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் நேற்றைய தினம், சந்திராயன் 2 ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இன்று காலை லேண்டரின் வட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தின் லேண்டர் நிலவின் 109 கி.மீ அருகில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நாளை 36 கி.மீ அருகில் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செப்.7 அதிகாலை நிலவில் விக்ரம் எனப்படும் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close