அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு தேங்காய் உடைத்து பூஜை!

  அனிதா   | Last Modified : 03 Sep, 2019 10:54 am
apache-aircraft

இந்தியா ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்பட்டது. 

இந்தியா முப்படைகளிலும் பலம் பொருந்தியது என்பதை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதில் விமானப்படையை பலப்படுத்தும் விதமாக 22 நவீன ரகமான ஏ.எச் - 64 இ அப்பாச்சி ஹெலிகாப்டர் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ,இந்திய விமானப்படையில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஹெலிகாப்படருக்கு பொட்டு வைத்து, மலர் தூவி, தேங்காய் உடைத்து, பூஜை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விமானப்படை தளபதி தன்னோவா உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close