குஜராத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து: 3 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2019 10:04 pm
gujarat-3-storey-building-collapses-in-ahmedabad-s-amraiwadi-several-feared-trapped

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அம்ராய்வாடி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று, இன்று திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 5 பேர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close