மும்பையில் தொடரும் கனமழை: விமான சேவையும் பாதிப்பு!

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2019 10:30 pm
heavy-rain-in-mumbai

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மும்பை நகரம் முழுவதுமே தண்ணீரில் மிதந்த நிலையில் காணப்படுகிறது.

நேற்று மும்பைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு போக்குவரத்து சேவை, விமான சேவை உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் .

மழை காரணமாக இன்று 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 300 விமானங்கள் தாமதமாக வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு விமான போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close