டெல்லியில் தீப்பற்றி எறிந்த ரயில்!

  கண்மணி   | Last Modified : 06 Sep, 2019 03:12 pm
fire-on-train-in-delhi


புது டெல்லி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த விரைவு ரயிலில் திடீரென தீப்பிடித்ததில் இரண்டு பெட்டிகள் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது.

டெல்லி சண்டீகர் - கொச்சிவேலி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் 2 மணியளவில் புது டெல்லியில் உள்ள 8ம் எண் பிளாட்பாரத்தில் வந்து நின்றுள்ளது. இந்நிலையில் பயணிகள் நிறைந்த அந்த ரயிலின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென தீப்பிடிக்க துவங்கி  ரயிலின் நான்கு பெட்டிகளுக்கு பரவியுள்ளது.

இதனை அடுத்து ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டுள்ளனர். பின்னர் தீயணைப்பு துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீயை அணைத்துள்ளனர். இதில் ரயிலின் இரண்டு பெட்டிகள் முழுவதும் எரிந்து சேதமாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close