காவிரி நீர்வரத்து சீராக உள்ளது: காவிரி ஒழுங்காற்று குழு தலைவர்

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 05:43 pm
cauvery-water-is-steady-chairman-of-cauvery-disciplinary-committee

கர்நாடகா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் உள்ள அணைகளுக்கு காவிரி நீர்வரத்து சீராக உள்ளதாக காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 15-ஆவது ஆலோசனை கூட்டம், நீர்வளத்துறை அமைச்சகத்தின் சேவாபவனில் ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார், ‘கர்நாடகா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் உள்ள அணைகளுக்கு காவிரி நீர்வரத்து சீராக உள்ளது. வானிலையும் சாதகமான சூழ்நிலையில் உள்ளது. நேற்று வரை பிலிகுண்டுலுவுக்கு வந்த நீரின் அளவு திருப்திகரமாக உள்ளது. அணைகளில் நீர் இருப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன, அதனை காவிரி ஒழுங்காற்று குழு பதிவு செய்து கொண்டது. அடுத்த கூட்டம் இம்மாதம் 3-ஆவது அல்லது 4-ஆவது வாரத்தில் நடைபெறும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close