ப.சிதம்பரத்திற்கு குறைந்தபட்ச மரியாதையாவது வழங்கியிருக்கலாம்: மம்தா ஆதங்கம்!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 08:05 pm
centre-should-have-shown-p-chidamabaram-some-respect-mamata-banerjee

மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு குறைந்தபட்ச மரியாதையாவது மத்திய அரசு வழங்கியிருக்கலாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு  வருகிற 19ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து கூறியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "மத்திய முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்தை ஒரு சாதாரண கைதி போல திகார் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்ன? என்று எனக்கு தெரியவில்லை. இந்த வழக்கின் முழு விவரங்கள் குறித்து எனக்கு தெரியாது. ஆனால், முன்னாள் நிதியமைச்சர் என்ற முறையில் அவருக்கு குறைந்தபட்ச மரியாதையாவது மத்திய அரசு வழங்கி இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close