'சவாலான அந்த 15 நிமிடங்கள் - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 08:55 pm
15-minutes-of-terror-before-chandrayaan-2-lands-on-moon-isro-chief

சந்திரயான் -2 நிலவின் தென் பகுதியில் தரை இறங்கும் அந்த 15 நிமிடங்கள் சவாலாகவும், பதற்றம் நிறைந்ததாகவுமே இருக்கும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் - 2 விண்கலம் நாளை அதிகாலை 1.55 மணியளவில் நிலவின் தென் பகுதியில் தரை இறங்க இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இந்த சிறப்புத் தருணத்தை பார்வையிடுகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து இஸ்ரோவின் தலைவர் சிவன் அளித்துள்ள பேட்டியில், "சந்திரயான்- 2 விண்கலம் திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறது. சரியாக 1.55 மணி அளவில் லேண்டர் விக்ரம் நிலவின் தென்பகுதியில் தரையிறங்க இருக்கிறது. லேண்டர் தரையிறங்கும் அந்த 15 நிமிட நிகழ்வானது மிகவும் சவாலானது. அனைத்து விஞ்ஞானிகளுக்கும் இந்த பதற்றம் இருக்கிறது. ஆனால், பயம் என்பது இல்லை.

திடீரென்று பிறந்த குழந்தையை கையில் கொடுத்தால் நமக்கு என்ன மாதிரி உணர்வு ஏற்படுமோ அதேபோன்ற ஒரு நிலைதான் இருக்கிறது. முதல்முறையாக இதனை முயற்சி செய்து வெற்றிகரமாக நிகழ்த்தி வருகிறோம். பலமுறை ஆய்வு செய்துள்ளதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.  எங்களைப் பொறுத்தவரையில் முதல் முயற்சி மற்றும் சவாலான செயல் என்பதால் கடைசி அந்த பயங்கரமான அந்த 15 நிமிடங்கள் சவாலாகவும், பதற்றம் நிறைந்ததாகவுமே இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close