திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.31 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 09:02 pm
gold-seized-in-trichy-airport

துபாயிலிருந்து இன்று திருச்சிக்கு வந்த விமானத்தின் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட, அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். 

இதில் அவர்கள் பல்வேறு உடைமைகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் முகமது ஆரிப், நாகூர் மீரான், முகமது உசேன், சர்புதீன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.31 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close