சந்திராயன்2: விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிப்பு

  அனிதா   | Last Modified : 07 Sep, 2019 08:35 am
chandrayaan-2-disconnection-of-vikram-lander-data

சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில், அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை  22ஆம் தேதி ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து  சந்திராயன் 2 விண்கலத்தை, ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.  பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு சந்திராயன்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் சந்திராயன்2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான விக்ரம் லேண்டர் நிலவின் தரையிறக்கும் முயற்சி இன்று அதிகாலை நடைபெற்றது. நிலவிற்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து இஸ்ரோ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close