சந்திராயன்-2 திட்டத்தின் 90 முதல் 95% பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன: இஸ்ரோ

  Newstm Desk   | Last Modified : 07 Sep, 2019 11:09 pm
chandrayaan-2-orbiter-may-last-up-to-7-years-95-of-mission-achieved-isro

சந்திராயன்-2 திட்டத்தின் 90 முதல் 95 சதவீதம் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 

சந்திரயான் - 2 விண்கலம் கடந்த ஜூலை 22ஆம் தேதி பிற்பகல் 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு நேற்று அதிகாலை சந்திரயான் -2 விண்கலம் லேண்டர் விக்ரம் நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கத் தொடங்கியது. அப்போது 2.1 கிலோமீட்டர் தூரத்தில் நிலவுக்கு அருகில் செல்லும் போது லேண்டரிடமிருந்து எந்தவிதச் சிக்னலும் கிடைக்கப் பெறவில்லை என்று இஸ்ரோ தகவல் தெரிவித்தது. இது சந்திரயான் திட்டத்திற்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

சந்திராயன்-2 திட்டத்தின் 90 முதல் 95 சதவீதம் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. லேண்டர் விக்ரமுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தாலும், ஆர்பிட்டர்  தொடர்ந்து நிலவு குறித்த பல்வேறு தகவல்களை இஸ்ரோவுக்கு வழங்கும். நிலவின் பல்வேறு புகைப்படங்களை இஸ்ரோ அனுப்பும். மேலும், ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஒரு ஆண்டுகள் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், இது ஏழு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் தன்மை உடையதாக தற்போது கணக்கிடப்பட்டுள்ளது. 

சந்திரயான் விண்கலத்தில் அனுப்பப்பட்ட நிலவில் இறங்கும் வாகனமான விக்ரம் எதிர்பார்த்தபடி நிலப்பரப்பில் சுமூகமாக இறங்கவில்லை. அது இறங்குவதற்குத் தேவையான வேகம் குறையாமல் தேவைக்கும் அதிகமான வேகத்தில் இறங்கியதில் விக்ரம் லேண்டர் சேதமடைந்திருக்க வேண்டுமென்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close