ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரதமர் இரங்கல்

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2019 10:56 am
president-prime-minister-mourns-the-demise-of-ram-jethmalani

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவரின் இரங்கல் செய்தியில், ’மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானர் என்ற செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தி சாதுர்யமிக்க புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞரை நாடு இழந்துவிட்டது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் இரங்கல் செய்தியில், மனதில் தோன்றுவதை பேசுவதே ராம் ஜெத்மலானியின் தனிச்சிறப்பு. உதவும் மனப்பான்மை என்பது அவரின் சிறந்த குணங்களில் ஒன்று. அவசரநிலை பொது சுதந்திரத்திற்கான அவரது துணிச்சல், போராட்டம் நினைவில் கொள்ளப்படும். ராம் ஜெத்மலானி மறைந்தாலும் அவரின் பணிகள் உயிர்ப்புடன் இருக்கும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராம் ஜெத்மலானியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close