குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

  அனிதா   | Last Modified : 09 Sep, 2019 11:03 am
president-kovind-leaves-for-three-nation-tour

இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று இரவு அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஐஸ்லாந்து புறப்பட்டார். இன்று ஐஸ்லாந்து சென்றடையும் ராம்நாத் கோவிந்த், வரும் 11 தேதி வரை ஐஸ்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பின்னர் சுவிட்சர்லாந்து செல்லும் குடியரசுத்தலைவர் அங்கிருந்து செப்.15ஆம் தேதி ஸ்லோவேனியா செல்கிறார். அங்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அங்கிருந்து செப்.17 ஆம் தேதி இந்தியா திரும்புகிறார். 

குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் இந்த சுற்றுபயணத்தின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அந்த நாடுகளின் உயர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close