துப்பாக்கி முனையில் கணவரின் எதிரில் பெண் கற்பழிப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Sep, 2019 01:29 pm
gang-raped-woman

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோஹா நகரில் பெண் ஒருவர் கணவரின் கண் எதிரிலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம், பிஜ்பூரை அடுத்த சந்த்பூரில் உள்ள மருத்துவரை சந்திந்து விட்டு கணவன்-மனைவி 2 பேரும் ரிக்ஷாவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, அம்ரோஹா நகர் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத 4-5 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கிவிட்டு, கணவரின் கண் எதிரிலேயே மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இது குறித்து பாதிக்கபட்ட பெண் போலீசாரிடம் கூறியதாவது: "நாங்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் திடீரென வெளிபட்ட மர்ம நபர்கள் ரிக்ஷா ஓட்டுனரைத் தாக்கினர். பயந்த அவர் வண்டியை விட்டு விட்டு ஓடிவிட்டார். பின் அந்த நபர்கள் என்னையும் என் கணவரையும் அடுத்திருந்ந வயலிற்கு இழுத்துச் சென்று துப்பாக்கியால் மிரட்டினர். தடுக்க வந்த என் கணவரையும் துப்பாக்கியால் தாக்கினர்". 

துப்பாக்கி வைத்து மிரட்டியே அவர்கள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், இவர்களின் சத்தத்தைக் கேட்டு மக்கள் வருவதைக் கண்டு மர்ப நபர்கள் தப்பியோடியதாகவும்அந்த பெண் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கணவரின் உடம்பில் தாக்குதலின் காயம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என கூறப்படுகிறது. எனினும், போலீசார் 2 நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 2017, உத்திரப்பரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் 30 - வயது பெண்ணும் கணவர் மற்றும் குழந்தையின் கண் எதிரில் இதே ரீதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close