இஸ்ரோ தலைவர் சிவனுக்கு சமூகவலைதள கணக்குகள் இல்லை: இஸ்ரோ விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 09 Sep, 2019 05:57 pm
isro-chief-sivan-does-not-have-social-network-accounts-isro

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு சமூகவலைதள கணக்குகள் இல்லை என்று இஸ்ரோ விளக்கமளித்துள்ளது.

சந்திரயான் – 2, விக்ரம் லேண்டார் நிலவில் தரையிறங்குவது குறித்த அனைத்து தகவல்களும் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  நேற்று முன்தினம் இஸ்ரோ தலைவர் சிவன் என்ற பெயரில் பல போலி ட்விட்டர் கணக்குகள் சமூகவலைத்தளத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன. கைலாசவடிவு சிவன் என்ற பெயரில், இஸ்ரோ தலைவர் சிவனின் புகைப்படத்துடன் கணக்கு இருந்தன.

இந்த நிலையில், இதுதொடர்பாக இஸ்ரோ இன்று அளித்துள்ள விளக்கத்தில், இஸ்ரோ தலைவர் சிவனுக்கு என்று எந்தவொரு சமூகவலைத்தளத்திலும், தனிப்பட்ட கணக்குகள் கிடையாது. அவரின் பெயரில் வரும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என்று தெரிவித்துள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close