ரூ.100 இருந்தால் போதும்: ட்ராபிக் போலீசிடம் இனி தண்டம் அழ வேண்டாம்!

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2019 03:43 pm
just-rs-100-will-save-you-from-traffic-violation-fine

சாலையின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்போர், எப்போதும் தங்கள் வாகனம் மற்றும்காப்பீடு குறித்த ஆவணங்களை கையில் எடுத்து செல்ல வேண்டும். அப்படி மறந்துவிட்டால், ஆவணங்கள் இல்லாமல் வண்டி ஒட்டியதற்காக, போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பர். 

மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி, அபராத தொகையின் அளவு, முன்பைவிட 10 மடங்கு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் உண்மையிலேயே அவசர வேலைகளின் காரணமாக, தங்கள் வாகன ஆவணங்களை, வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு, போக்குவரத்து காவலர்களிடம் சிக்கோவோர் இனி கவலை கொள்ள தேவை இல்லை. 

அதாவது, வாகன ஆவணங்கள் இல்லையெனில், 100 ரூபாய் அபராதமாக செலுத்தி விட்டு, பின்னர் வரும் 15 நாட்களுக்குள், ஆவணங்களை அதற்குரிய அலுவலகக் கிளையில் சமர்ப்பித்து, தங்களது 100 ரூபாய் கான ரசீதை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 100 ரூபாயில் அனைத்து வேலைகளும் முடிந்து விடும். 

ஆவணங்களை மறந்ததற்காக, இனி அதிக அபராத தொகை செலுத்தவும் தேவை இல்லை. கை நீட்டும் போக்குவரத்து போலீசாருக்கு 'கட்டிங்' கொடுக்க வேண்டுமே என்ற அவஸ்த்தையும் இல்லை. 
இது நிஐமாகவே ஆவணங்களை மறந்து வைத்து விட்டு வருபவர்களுக்கு மட்டுமே... நினைவிருக்கட்டும்.....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close