பைக் ஆவணங்களை ஹெல்மெட்டில் வைத்து பயணிக்கும் பைக்கர்..!

  அனிதா   | Last Modified : 11 Sep, 2019 03:45 pm
traveling-biker-with-bike-documents-on-helmet

லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்.சி புக் என போக்குவரத்துக்கான ஆவணங்களை ஹெல்மெட்டில் ஒட்டி வைத்து பயணிக்கும் பைக்கரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

புதிய வாகன போக்குவரத்து சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து வாகன ஓட்டிகள் சட்டத்தை மதித்து வாகனம் ஓட்டுகிறார்களோ இல்லையோ.. அபராதத்திற்கு பயந்து சட்டப்படி வாகனம் ஓட்டுகின்றனர். முன்பெல்லாம், போக்குரவத்து சட்டத்தை மீறினால் ரூ.100, ரூ.500 என போக்குவரத்து காவலர்களிடம் அபராதம் செலுத்திவிட்டு சென்றுவிடலாம். 

ஆனால், இப்போது உள்ள புதிய சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறினால் ரூ.2000, ரூ.5000, ரூ.10,000 என மாத சம்பளத்தில் பாதியை கொடுத்துவிட்டுதான் செல்லவேண்டும். இந்த பயத்தினாலேயே வாகன ஓட்டிகள் தற்போது போக்குவரத்து விதிகளை கற்றுக்கொண்டு சட்டத்தை மதித்து வாகனம் இயக்குகின்றனர். இருப்பினும் போக்குவரத்து விதியை புதிதாக பழகுபவற்களுக்கு மறதி என்ற ஒன்று அவ்வபோது அவர்களை ஆட்கொள்ளலாம். 

இதனை முறியடிக்கும் வகையில், குஜராத் மாநிலம் வடோரா என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் தனது லைசென்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் முதலியவற்றை தனது ஹெல்மெட்டிலேயே ஒட்டி வைத்து பயணம் செய்கிறார். இதனால் போக்குவரத்து போலீசார் அவரிடம் ஆவணங்களை கேட்கும் போது, தேடிகொண்டிருக்காமல், ஹெல்மெட்டை கழற்றி ஒவ்வொரு பக்கமும் திருப்பி காண்பிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close