இந்தியாவுடனான காஷ்மீர் இணைவிற்கு இஸ்லாமிய அமைப்பு ஆதரவு

  அபிநயா   | Last Modified : 12 Sep, 2019 02:54 pm
support-from-kashmir-s-important-muslim-group-for-their-intergration-with-india

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட நிலையில், காஷ்மீரின் மிக முக்கியமான  ஜாமியத் உலாமா - ஐ - ஹிந்த் என்ற முஸ்லீம் அமைப்பு இந்தியாவுடன் இணைவதற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியப் பிரதேசங்களாக பிரித்து புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அக்டோபர் 31 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. 
இந்நிலையில், டெல்லியில் வியாழனன்று (இன்று) நடைபெற்ற கவுன்சிலிங் கூட்டத்தில், காஷ்மீரில் மிக முக்கிய அமைப்பாகக் கருதப்படும் ஜாமியத் உலாமா - ஐ - ஹிந்த் அமைப்பு, சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவதற்கான, இந்திய அரசின் முடிவை ஏற்பதாகவும், முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது ஏற்படும் காஷ்மீர் விவகாரத்தை வைத்து பிற நாடுகள்  இந்தியாவில் பிரிவினைவாதத்தை உண்டாக்குவதாகவும், இது காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஆபத்தாகவே அமையும் என்பதால், இந்தியாவுடன் இணைவதே காஷ்மீருக்கு நல்லது எனவும் அந்த அமைப்புக் குறிப்பிட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close