அருண் ஜெட்லிக்கு கெளரவம்: டெல்லி மைதானத்திற்கு ஜெட்லியின் பெயர்!

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2019 09:24 pm
ddca-renames-feroz-shah-kotla-as-arun-jaitley-stadium

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை கௌரவப்படுத்தும் விதமாக டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு  ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மரணமடைந்தார். இவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அருண் ஜெட்லியை கௌரவப்படுத்தும் விதமாக டெல்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு ஜெட்லியின் பெயரை சூட்டி மத்திய அரசு உத்தரவிட்டது.இன்று கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, கிரிக்கெட் வீரர்கள், அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர். அதேபோன்று மைதானத்தின் பெவிலியன் ஒன்றுக்கு விராட் கோலியின் பெயர் சூட்டப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close