டெல்லியில் லாரி ஓட்டுனருக்கு ரூ. 2,00,000 அபராதம்

  அபிநயா   | Last Modified : 13 Sep, 2019 03:16 pm
truck-driver-has-been-imposed-with-rs-2-lakhs-for-traffic-violation

டெல்லியில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு, மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி ரூ. 2,00,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி, அபராத தொகையின் அளவு, முன்பைவிட 10 மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில்,  டெல்லியில் லாரி ஓட்டுனரான ராம் கிஷோருக்கு, புதிய வாகன சட்டத்தை மீறியதற்காக ரூ. 2,00,500 க்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது.
 அவரின் வாகன விதிமீறல் பட்டியல் இதோ :
- வாகன எடை அளவு மீறல் - ரூ. 20,000 + ரூ. 36,000 (1 டன்னிற்கு ரூ. 2000 வீதம், மொத்தம் 18 டன்கள்)
- ஓட்டுனர் உரிமம் இல்லை - ரூ. 5,000
- பதிவு சான்றிதழ் இல்லை - ரூ. 10,000
- அனுமதி மீறல் - ரூ 10,000
- வண்டி பராமரிப்பின்மை - ரூ. 10,000
- காப்பீடு - ரூ. 4,000
- மாசு கட்டுபாட்டுச் சான்றிதழ் - ரூ. 10,000
- வண்டியில் சரியாக மூடப்படாத கட்டுமான பொருட்கள் - ரூ.20,000 
- சீட் பெல்ட் அணியாதல் - ரூ. 1,000
இதே போன்று, ராஜஸ்தான் லாரி ஓட்டுனர் பக்வான் ராமி - ற்கு, ரூ. 1,41,000 - ம், ஒடிசாவின் அசோக் ஜாதவ் - ற்கு ரூ 86.500 - ம் அபராதம் விதிக்கப்பட்டதுக் குறிப்பிடத்தக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close