திருச்சி எச்டிஎஃப்சி வங்கியை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு! இதுதான் காரணம்..

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2019 08:47 pm
trichy-hdfc-bank-issue

திருச்சியில் உள்ள எச்டிஎஃப்சி வங்கி ஒன்றை ஜப்தி செய்ய திருச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 

திருச்சி ஆலம்பட்டி புதூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி தில்லைநகரில் உள்ள எச்டிஎஃப்சி வங்கியில் 7 லட்ச ரூபாய் வாகனத்திற்கான கடன் வாங்கியுள்ளார். 17 மாதம் வாகனத்திற்கான தொகையை கட்டிய பிறகு மூன்று மாதம் கட்டவில்லை என வாகனத்தை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்திரசேகருக்குத் தெரியாமல் வாகனத்தை வேறொரு நபரிடம் 4 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு, சந்திரசேகரிடம் மேற்கொண்டு ஒன்றரை லட்ச ரூபாய் தரவேண்டும் என கேட்டு மிரட்டிள்ளனர். 

இதையடுத்து, திருச்சி முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சந்திரசேகர் தனக்கு வாகனம் அல்லது இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இதனையடுத்து, திருச்சி முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி ஆனந்தன் மூன்று லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை சந்திரசேகருக்கு இழப்பீட்டு தொகையாக வங்கி தர வேண்டும் இல்லையென்றால் வங்கியில் உள்ள இதற்கு இணையான பொருட்களை ஜப்தி செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.

இதனையடுத்து வழக்கறிஞர்கள் மற்றும்  நீதிமன்ற ஊழியர்கள் இன்று ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட முயன்றபோது, வங்கி ஊழியர்கள் அவரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது  என தொடர்ந்து  தடுத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். ர் நீதிமன்ற உத்தரவை பெற்று காவல்துறை உதவியுடன் மீண்டும் ஜப்தி  நடவடிக்கையில்  ஈடுபடுவோம் என நீதிமன்ற ஊழியர் எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close