விமானப்படைக்கென ரூ. 5000 கோடியில் கூடுதல் ஆகாஷ் ஏவுகணைகள்

  அபிநயா   | Last Modified : 14 Sep, 2019 01:02 pm
indian-air-force-in-need-of-more-akash-missiles

 இந்திய விமானப்படைக்கென தயாரிக்கப்பட்டு வரும் ஆகாஷ்  ஏவுகணைகள் கூடுதலாக தேவைப்படுவதால், பெங்களூரின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சகமும் கூடுதாலாக 5,000 கோடி மதிப்பில்  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
பெங்களூரின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனமு ம், பாதுகாப்பு அமைச்சகமும் இந்திய விமானப்படைக்கென, கூடுதல் ஏவுகணைகளை தயாரிக்க, ரூ. 5,357 கோடி மதிப்பிலான  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
பாரத் டைனமிக்ஸ் நிறுவனம்  இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய விமானப்படைக்காக  தயாரிக்கப்பட்டு வரும் ஆகாஷ் ஏவுகணைகள் இன்னும் 3 வருடங்களில் தயாராகி, 7 படைப்பிரிவுகளுக்கும் அனுப்பப்படும். 2015-16 ல் "மத்திய தர ஏவுகணைகள்"  6   படைப்பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன".
ஆகாஷ் ஏவுகணைகளின் வடிவமைப்பகளை, பாதுகாப்பு அமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகமும் ( டி.ஆர்.டி.ஓ), உற்பத்தியினை  ஹைதராபாத் - ஐ சேர்ந்த பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் - ம் செய்து வருகின்றனர்.
ஆகாஷ், 3D மின்னணு ஸ்கேன் ரேடார், நான்கு லாஞ்சர்ஸ் மற்றும் 3 ஏவுகணைகளுடன் அமைக்கப்பட்டு வருவதாக பாரத் டைனமிக்ஸ் அதன்  செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close