ஏற்றுமதி பொருட்கள் மீது வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன்

  அனிதா   | Last Modified : 14 Sep, 2019 03:24 pm
tax-low-on-exports-nirmala-sitharaman

ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி குறைப்பு 2020 ஜனவரியில் அமலாகும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில், நாட்டின் பொருளாதார சூழல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும், கடந்த மாதம் 3.2 சதவீதமாக இருந்த பண வீக்கம் தற்போது 2.5 சதவீதமாக குறைந்துள்ளது என குறிப்பிட்டார். நாட்டின் உற்பத்தியை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

வங்கி சீர் திருத்தத்தை அடுத்து, வரியில் சீர் திருத்தம் கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், வருமானவரி செலுத்தும் விவகாரத்தில் மென்மையான போக்கு கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்ய வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான கட்டுபாடுகள் தளர்த்தப்படும் என தெரிவித்தார். 

அந்நியச்செலவாணி கையிருப்பு நாட்டில் போதுமான அளவிற்கு உள்ளது என்றும் தொழில் செய்ய உகந்த நாடு என்பதற்கான இந்தியாவின் தரவரிசை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதியில் சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும்
ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி குறைப்பு 2020 ஜனவரியில் அமல்படுத்தப்படும் எனவும் கூறினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close