சுவிட்சர்லாந்து நாட்டில் மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2019 08:21 pm
president-ram-nath-kovind-unveils-statue-of-mahatma-gandhi-at-villeneuve-switzerland

காந்தி ஜெயந்தி வருவதை முன்னிட்டு, சுவிட்சர்லாந்து நாட்டில் மகாத்மா காந்தியின் சிலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்துவைத்தார்.

அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அந்நாட்டில் வில்லேநீயூவ் என்ற நகரில் நிறுவப்பட்ட காந்தியடிகளின் சிலையை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார். மேலும், அப்பகுதிக்கு காந்தி சதுக்கம் என்று அந்நாட்டு அரசு பெயரிட்டுள்ளது. இதற்காக அவர் அந்நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், "மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் நோக்கமாக இருந்தது. அனைத்து பண்பாடுகளையும் மதித்து அனைத்து மக்களையும் ஒன்று என பாவித்தவர், அதனால் தான் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் பிடித்தமானவராக இருக்கிறார்.

பிரெஞ்சு நாவலாசிரியர் ரோமன் ரோலண்ட் அழைப்பின் பேரில் மகாத்மா காந்தி இங்கு வந்திருந்தார். அவரது கொள்கைகள் பல்வேறு வழிகளில் நமக்கு பயன்படும்" என்று அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close