அமித்ஷாவின் ஹிந்தி மொழி கருத்து: தலைவர்கள் எதிர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Sep, 2019 11:46 am
amit-shah-s-twit-about-hindi-language-leaders-opposition

ஹிந்தி தினத்தையொட்டி வந்த அமித் ஷா வின் டிவிட்டர் பதிவுக்கு எதிராக பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கேரள முதலமைச்சர், இது இந்தியாவில் மொழி போரை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறியுள்ளார்.

கடந்த செப் 14., ஹிந்தி தினத்தையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவை ஒருங்கிணைக்கும் மொழி உண்டு என்றால் அது ஹிந்தியாக தான் இருக்கும். ஒரே மொழியாக ஹிந்தி இருந்தால் இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்த முடியும்" எனக் கூறியிருந்தார்.

அவர் முன்னரே ஒரு முறை குறிப்பிடுகையில், " நாட்டில் 29 பிராந்திய மொழிகளும் 300க்கும் மேற்பட்ட வழக்காடு மொழிகளும் உள்ளன. ஆனால் பொதுவான மொழியாக, தேசிய பிணைப்பு மொழியாக அந்நிய மொழியை ஏற்ககூடாது. அது பெரும் பிழைக்கு வழி வகுக்கும் என்று கூறியிருந்தார். இதில் அந்நிய மொழி ஆங்கிலத்தையும் உள்நாட்டு மொழியாக இந்தியையும்  குறிப்பிட்டுக் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த பதிவுகள் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், " ஹிந்தியால் மட்டும் தான் இந்தியாவை இணைக்க முடியும் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது. இந்தியா பல மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் இணைப்பு. அதனை ஒரு மொழிக்குள் கொண்டு வர நினைப்பது சரியல்ல, இதனால் ஹிந்தி பேசாத மக்களுக்கு இந்தியா தங்கள் நாடு இல்லையோ என்ற எண்ணம் வரக்கூடும்" என அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிடுகையில், உள்துறை அமைச்சரின் இந்த கருத்து, வருத்துமளிப்பதாகவும், கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார். 

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ரன்தீப் சிங் தனது ட்விட்டர் பதிவில், "ஹிந்தி தான் இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று படுத்தும். ஹிந்தி மொழி யின் மேம்பாட்டிற்கு உதவும் அனைவருக்கும் என் மனம் நிறைந்த "ஹிந்தி தின" வாழ்த்துக்கள்" என அமித் ஷா கருத்தை ஆதரிக்கும் வகையில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்., 14 1949 - ல் இந்திய அரசியலமைப்புக் கூட்டத்தில், ஹிந்தி மொழி நம் நாட்டின் அதிகாரப் பூர்வமான மொழியாக அறிவிக்கப்பட்டு, ஜனவரி 26, 1950 - ல் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவின் 22 முக்கிய மொழிகளில் ஹிந்தி மொழியும் ஒன்று.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close