ஆந்திரா படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிப்பு!

  அனிதா   | Last Modified : 15 Sep, 2019 05:24 pm
andhra-boat-crash-rs-10-lakh-notice

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டணம் அருகே கோதாவரி ஆற்றில் 60க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற சுற்றுலா படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கினர். சுமார் 25 பேர் நீந்தி கரையை வந்தடைந்த நிலையில், ஆற்றில் மூழ்கிய 30க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடம் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

படகு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close