மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை இருக்காது: சீன வெளியுறவுத்துறை

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 10:14 pm
kashmir-may-not-be-major-topic-during-modi-xi-meet-chinese-foreign-ministry

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை இருக்காது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும், "இந்திய-சீன துருப்புகளுக்கு இடையேயான பிரச்னை மற்றும் டோக்லாம் பிரச்சினை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கலாம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது  இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். எனவே இந்த விஷயம் குறித்து இரண்டு தலைவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை .

அக்டோபர் 10 முதல் 12ஆம் தேதி வரை மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்கலாம். ஆனால், தற்போது இதை உறுதிப்படுத்த முடியாது. இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவின் அண்டை நாடு என்பதால் இரு நாடுகளுடன் அமைதியை நாங்கள் எதிர்பார்க்கிறோம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முயற்சி செய்யலாம். எந்த ஒரு பிரச்சினையும் அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். எல்லைப் பகுதிகள் அமைதியானதாகவும், நிலையானதாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பானதாகவும் இருக்க இரு நாடு முயற்சி செய்யும்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close