என்.ஜி.ஓக்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது!

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2019 10:40 pm
govt-tweaks-foreign-funding-rules-all-ngo-staff-must-now-declare-no-role-in-religious-conversions

வெளிநாட்டில் இருந்து வரும் நிதி தொடர்பான விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம்(FCRA), 2011 விதியின்படி இயக்குனர்கள் போன்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே வெளிநாட்டிலிருந்து வரும் நிதியை பெற அனுமதி கோர முடியும்.

அதேபோன்று ஓவர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினரும் வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், உறுதிமொழியின் வாயிலாகவோ அல்லது பிரமாணப் பத்திரத்தின் வாயிலாகவோ வெளிநாட்டிலிருந்து நிதிகளை பெறமுடியும். mமதமாற்றத்தில் ஈடுபட முடியாது. அதேபோன்று தனிப்பட்ட நபர்கள் ஒரு லட்சம் வரையிலான தொகையை வெளிநாட்டில் இருந்து நிதியாக பெற முடியும். மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திடீரென வெளிநாட்டு சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை வந்தால் ஒரு மாதத்திற்குள் இந்திய அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிநாட்டில் சிகிச்சை பெறும் போது இந்திய ரூபாயில் அது எவ்வளவு மதிப்பு, எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது, பயன்படுத்தப்பட்ட விதம் உள்ளிட்ட முழு விபரங்களும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் இந்த விவரத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close