பாக். வான்வழியில் பயணிக்க அனுமதி கோரியது இந்தியா!

  அனிதா   | Last Modified : 18 Sep, 2019 02:47 pm
india-requests-permission-to-pakistan

பாகிஸ்தான் வான் வழியில் பிரதமர் மோடி அமெரிக்கா பயணிக்க இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று இந்திய விமானப்படை பாலக்கோட் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.  இதை தொடர்ந்து பாகிஸ்தான் வான் வழியில் இந்திய விமானங்கள் பயணிக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.  

இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ளதால், பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி அமெரிக்கா பயணிக்க இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பயணம் குறித்து கலந்தாலோசித்த பின்பு இந்தியாவிற்கு பதிலளிக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close