டெல்லி:  நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்!!

  கண்மணி   | Last Modified : 19 Sep, 2019 02:14 pm
delhi-a-man-arrested-for-raping-his-wife

டெல்லியில் உள்ள  கீதா காலனியில் வசிப்பவர் அதுல் அகர்வால் இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி காவல் நிலையத்தில் தனது கணவர் பாலியல் வன்கொடுமைக்கு தன்னை ஆளாக்கினர் என்றும், அவருடைய நண்பர்களுடன் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தியதாகவும், இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாகவும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது: கடந்த ஜனவரி மாதம், தன்னுடைய கணவரான அகர்வாலின் அனுமதியுடன் அவரின் நண்பர்களான சஞ்சய் கௌசிக் மற்றும் புஷ்பேந்திர மிஸ்ரா என்னும் இரு நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமை படுத்தியதாகவும் புகார் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தன்னை அவருடைய நண்பர்கள் வன்புணர்வு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி பின் வீட்டிற்கு வந்த கணவர், தன்னை இயற்கைக்கு மாறான முறையில் பலாத்காரமாக உடலுறவு கொண்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தை  வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் எனவும், இல்லையேல் தன்னை இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவில் ஈடுபடுத்தியதை வீடியோவில் பதிவு செய்துள்ளதாகவும், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்த பெண்ணின் கணவர் அகர்வால் மற்றும் அவரின் நண்பர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close