டிசம்பர் 1ம் தேதி முதல் 'பாஸ்டேக்' முறையில் மட்டுமே சுங்கக்  கட்டணம் வசூலிக்கப்படும்!

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 07:37 am
toll-gates-with-fastag

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு கூறி வந்தது. அதன்படி, வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் 'பாஸ்டேக்' முறையில் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

'பாஸ்டேக்' முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆர்.எப்.ஐ.டி எனப்படும் ரேடியோ கதிர் டெக்னாலஜி மூலமாக இந்த 'பாஸ்டேக்' செயல்படும். இதன்படி வாகனங்களுக்கான குறியீட்டு அட்டையை பெற்று குறிப்பிட்ட தொகையை அதில் ரீசார்ஜ் போல செய்து கொள்ள வேண்டும். 

இதன் பின்னர் ஒவ்வொரு டோல் கேட்டிலும் அந்த குறியீட்டைபி பயன்படுத்தி அதற்கான கட்டணத்தை தானாகவே எடுத்துக்கொள்ளும். பின்னர் தேவைப்படும்போது இணையதளம் மூலமாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் இது நாடு முழுவதுமாக அமலுக்கு வருகிறது. விரைவில் பெட்ரோல் பங்குகளிலும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close