உலக அளவிலான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி உள்ளிட்ட 4 இந்தியப் பல்கலைக்கழகங்கள்!

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 09:51 pm
iit-bombay-iit-delhi-iit-madras-delhi-university-in-world-s-top-200-qs-graduate-employability-rankings

வேலைவாய்ப்புத் திறன் குறித்த தரவரிசையில் உலகம் முழுவதும் உள்ள 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சேர்ந்த நான்கு பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை, ஐஐடி சென்னை, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைகழகங்கள் வேலைவாய்ப்பு திறன் குறித்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களில் உள்ள வேலைவாய்ப்பு திறன் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதில், உலகம் முழுவதும் உள்ள 200 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசை பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்படும். அதன்படி, ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை, ஐஐடி சென்னை, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

மேலும், எம்.ஐ.டி(Massachusetts Institute of Technology) முதலிடத்திலும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University) இரண்டாம் இடத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்திலும், சிட்னி பல்கலைக்கழகம் நான்காம் இடத்திலும், ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஐந்தாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close