திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2019 10:42 am
tainted-sekhar-reddy-among-seven-ttd-board-special-invitees

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட போது, ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி ரூபாய் 130 கோடி மதிப்பிலான பணத்தை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ சேகர் ரெட்டியை கைது செய்தது.

திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் தமிழகத்தில் சார்பில் உறுப்பினராக இருந்தவர் சேகர் ரெட்டி. அவரை சிபிஐ கைது செய்ததன் காரணமாக, சேகர் ரெட்டி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் அதிமுக அமைச்சர்கள், தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக இவர்களிடம் சிபிஐ விசாரணை செய்தும் வந்தது. 

இந்த நிலையில் வருமான வரி சோதனைகள் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் சேகர் ரெட்டி சட்டப்பூர்வமாக பதிவு செய்தது என்று நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் அவர் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக சேகர் ரெட்டி ஆந்திர அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close