ஹரியானா மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கும் பாஜக!

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2019 09:15 pm
in-first-election-since-kashmir-and-nrc-bjp-targets-haryana-maharashtra

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பின்னர், ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலை பாஜக எதிர்கொள்ள இருக்கிறது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் தனித்து வெற்றிபெற்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து, கடந்த மக்களவை கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 

அதேபோன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. பாஜகவுக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. அடுத்ததாக, அசாம் மாநிலம் என்.ஆர்.சி பட்டியலை வெளியிட்டது பாஜகவின் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக வியூகம் வகுத்து வருகிறது. 

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி 400க்கும் மேற்பட்ட இடங்களில் பரப்புரை செய்தார். இதில், 282 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், 2019 தேர்தலில் 144 இடங்களில் மட்டுமே பரப்புரை செய்த மோடி பாஜக 303 இடங்களை கைப்பற்றியது. இதுவோ மோடியின் ஒரு வியூகமாகவே பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close