பாபர் மசூதி வழக்கு: உ.பி.முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு சிபிஐ சம்மன்.

  அனிதா   | Last Modified : 22 Sep, 2019 01:13 pm
babar-mosque-case-up-chief-minister-summoned-by-former-cm

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங், செப்டம்பர் 27 ம் தேதி ஆஜராகுமாறு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் ஆட்சிக் காலம் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடைந்ததாக பார் அசோசியேஷன் கூறிய தவலையடுத்து,  சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவ் மத்திய புலனாய்வுப் பிரிவின் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து சம்மன் அனுப்பியுள்ளார். 

மேலும் கல்யாண் சிங் தவிர, 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி 14 ஆம் நூற்றாண்டில் பாபர் மசூதியை இடிப்பதற்கு சசி செய்த முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, எம்.எம். ஜோஷி, உமா பாரதி உட்பட பலர் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளனர். 

சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக 1993 ஆம் ஆண்டு கல்யாண் சிங் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்யாண் சிங் ராஜஸ்தான் ஆளுநராக பதவி  வகித்து வந்தார். அரசு பதவியில் இருப்பதால் அவருக்கு விசாரணையில் இருந்து விதிவிலக்கு அளித்த உச்ச நீதிமன்றம், அவர் பதவி முடிந்தவுடன் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அனுமதி அளித்தது. இந்த உத்தரவு காரணமாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீனில் உள்ளனர். 

இந்நிலையில், செப்டம்பர் முதல் வாரத்துடன் அவரது பதவி காலம் முடிவடைந்ததையடுத்து, சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close