முதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடல்! என்ன காரணம்?

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 08:25 pm
rb-01-the-story-behind-the-tail-number-of-india-s-first-rafale

பிரான்சிடம் இருந்து வாங்கும் முதல் ரபேல் போர் விமானத்திற்கு புதிய ஏர் மார்ஷல் ஆர்.எஸ்.பாதாரியாவை கௌரவிக்கும் பொருட்டு ஆர்.பி.- 01 என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரான்சின் டஸால்ட் ஏவியேஷன் என்ற நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்படி வருகிற 2020 மே மாதம் முதல் ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

மேலும், ரபேல் போர் விமானங்களை பார்வையிட வருகிற அக்டோபர் 8ம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்சுக்கு செல்ல இருக்கிறார். மேலும், இந்திய விமாப்படை இதனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் முதல் விமானத்திற்கு ஆர்.பி.- 01 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் அடுத்த ஆர் மார்ஷலாக ஆர்.எஸ்.பாதாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பெயரை வைத்து முதல் ரபேல் விமானத்திற்கு ஆர்.பி-01 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய ஏர் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவின் பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைய உள்ளது. 

புதிய ஏர் மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ள பாதாரியா, ராணுவத்தில் 'Sword of honour' என்ற மரியாதையை பெற்றவர். 26 வகையான ஜெட் விமானங்களில் 4,250 மணிநேரங்கள் பயணித்தவர். ஒரு தனித்தன்மை வாய்ந்த விமானப்படை அதிகாரியாக இவர் காணப்படுகிறார். மேலும்,  சிறப்பாக ஒரு விமானத்தை இயக்க மற்றும் வழிநடத்தக் கூடிய 'ஏ' பிரிவு தகுதி பெற்றுள்ளார்.

இந்தியாவும், பிரான்சும் ரூபாய் 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களை பெறுவதற்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் இந்த ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close