ஜார்க்கண்ட் மாநிலத்தில் அல்கொய்தா தீவிரவாதி கைது!

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 10:18 pm
al-qaeda-terrorist-arrested-in-jharkhand

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூர் நகரில் டாடா நகர் ரயில் நிலையத்தில் முகமது கலிமுதீன் என்ற தீவிரவாதி இன்று அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் அதி பயங்கர தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி அளிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், சவுதி அரேபியா, ஆப்பிரிக்கா , வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது கலிமுதீனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

ஜாம்ஷெட்பூர் நகர காவல் நிலையத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதையடுத்து கடந்த மூன்று வருடங்களாக தலைமறைவாக இருந்த இவரை, போலீசார் தீவிரமாக தேடி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close