பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது: பிபின் ராவத்

  கண்மணி   | Last Modified : 23 Sep, 2019 02:06 pm
balakot-terrorist-training-camp-in-pakistan-reactivated-bipin-rawat

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட  பாலகோட் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமை மீண்டும் பாகிஸ்தான் சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில்  இன்று நடைபெற்ற இளம் ராணுவ வீரர்களுக்கான புதிய பிரிவு தொடக்க விழாவில் கலந்து கொண்ட இந்திய  ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது: காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடடியா, பாகிஸ்தானில்  பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின்  பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்களை இந்திய விமானப்படை அழித்தது.

அந்த முகாம் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளதாகவும் அதற்கு உறுதுணையாக பாகிஸ்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு 500க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழையவிருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close