விரிவுரையாளரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட 21 வயது வாலிபர் கைது: 

  கண்மணி   | Last Modified : 23 Sep, 2019 03:46 pm
21-year-old-youth-arrested-in-mumbai

மும்பையில் தன்னிடம்  ஆபாசமாக நடந்துகொண்ட வாலிபரை, பெண் கல்லூரி விரிவுரையாளர் துணிச்சலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.

மும்பையில் உள்ள தனியார் கல்லூரிக்கு அருகே  கடந்த சனிக்கிழமையன்று 21 வயதான வாலிபர் ஒருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ரிக்ஸாவிற்கு பின்னர் நின்ற படி தன்னுடைய கைபேசியில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது கல்லூரி முடிந்து வெளியே வந்த 39 வயதான பெண் விரிவுரையாளரிடம் தனது பிறப்புறுப்பை காண்பித்து ஆபாசமாக அந்த வாலிபர் நடந்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் விரிவுரையாளர் சற்றும் தளராமல் தன்னுடைய கைபேசியின்  மூலம் அந்த வாலிபரை புகைப்படம் எடுத்து அதனை ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்னர் இந்த தகவலை அறிந்த மும்பை போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close