வேன், பேருந்து மோதல்: 13 பேர் உயிரிழந்த சோகம் 

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 05:42 pm
van-bus-collision-13-killed-in-tragedy

ராஜஸ்தான் மாநிலத்தில் வேன் மீது பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ததானியா பகுதியின் அருகே செய்சால்மர் - ஜோத்பூர் சாலையில் இன்று வேனும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் ஜோத்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close