கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 09:01 pm
ec-announces-new-date-for-bypolls-to-15-karnataka-assembly-seats-as-sc-hears-disqualified-mlas-pleas

கர்நாடகாவில் அக்.21ல் நடப்பதாக அறிவிக்கப்பட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் டிச.5ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் அப்போதைய முதல்வர் குமாரசாமி ஆட்சி மீதான அதிருப்தி காரணமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏக்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். மேலும் தொடர்ந்து இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

இந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதன் காரணமாக கர்நாடகாவில் இந்த 15 தொகுதிகளுக்கும் தேர்தலானது டிசம்பர் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close