காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள்: சிறப்பு ஆவணப்படம் தயாரிப்பு!

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 09:33 pm
mahatma-gandhi-s-rare-video-will-be-ready-for-his-birthday

வருகிற அக்டோபர் 2ம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் 30 ரீல்கள் அடங்கிய மகாத்மா காந்தி குறித்த ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. இதுவரை கிடைக்காத சில அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் அஸ்தி மதராஸ் பட்டினத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது  வழியில் உள்ள ரயில் நிலையங்களில் கண்ணீர் மல்க மக்கள் அந்த அஸ்தியை வழிபாடு செய்த காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close