மும்பையில் தொடர் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு!

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2019 09:43 pm
mumbai-heavy-rain-death-toll-rises-to-18

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன மழையினால் ஏற்பட்ட நீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close