ஐ.என்.எஸ். காந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் ராஜ்நாத்சிங்

  அனிதா   | Last Modified : 28 Sep, 2019 10:19 am
minister-rajnath-singh-dedicated-the-ins-khanderi-to-the-country

ஐ.என்.எஸ் காந்தேரி என்ற நீர்மூழ்கி கப்பலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் ஆகியோர் நாட்டுக்கு அர்ப்பணித்தனர். 

ஐ.என்.எஸ் காந்தேரி பிரெஞ்ச் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டீசலில் இயங்கும் 2 வது கல்வாரி வகை நீர் மூழ்கி கப்பல் ஆகும். இது தரை மற்றம் நீருக்கடியில் உள்ள இலக்குகளை தாக்கி அழிப்பதில் வல்லமைபெற்றது. மேலும், நீருக்கடியிலிருந்து ஏவுகணை ஏவும் வசதி, குறைவான ஓசை எழுப்பும் இன்ஜின் என நவீன தொழில் நுட்பம் கொண்ட இரண்டாவது கல்வாரி வகை நீர் மூழ்கிப்பலை மும்பையில் உள்ள கடற்படைத்தளத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் ஆகியோர் நாட்டுக்கு அர்ப்பணித்தனர். 

பின்னர் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு கிடைக்குமா என பாகிஸ்தான் வீடு வீடாக கதவை தட்டுவதாகவும், பாகிஸ்தானின் செயல் கார்ட்டூனிஸ்ட்களுக்கு உள்ளடக்கத்தை அள்ளி தருவதாகவும் தெரிவித்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close